Thursday 30 July 2015

R.P.OM அவர்களின் அழகு குறிப்புகள் பகுதி - 1

R.P.OM அவர்களின் அழகு குறிப்புகள்  பகுதி - 1

ஜெய்மாம் லக்ஷ்மி வாசகர்களே உங்களுக்காக ஓம் பாஸிட்டிவ் யோகா செண்டர் நடத்துனரும் எண்கணிதம்,வாஸ்து,பரிகார நிபுணருமான திரு ஆர்.பி ஓம் அவர்கள் இனி தொடர்ந்து அழகு குறிப்புகள் எழுத இருக்கிறார் படித்து பயன் பெறுங்கள்.எந்த வியாதியாக இருந்தாலும் பிரச்சனையாக இருந்தாலும் அவரை சந்தித்து தீர்வு பெறுங்கள்.


தொடர்புக்கு  :8056156496,9962442417
எச்சரிக்கை : 
அனுமதியின்றி யாரும் நகல் எடுக்க கூடாது


முக்கிய குறிப்புகள்:

குறிப்பு :
நாங்கள் தருகிற குறிப்புகள் ஒரு சிறு உதவியே 100 % தீர்வு வேண்டுமெனில் எங்களை தொடர்புகொள்ளுங்கள்
முழுமையாக தீர்வுக்கு உங்கள் நேரம்,பெயரமைப்பு உடலின் பஞ்ச பூத தன்மை,உங்கள் பழக்க வழக்கம்,மன நிலை உங்கள் கர்மா,வீட்டின் வாஸ்து அமைப்பு என பல அமசங்களை சீர்தூக்கி பார்த்து தீர்வு,பரிகாரம்,வைத்தியம்ஆலொசனை, வழங்கவேண்டும். அழகு குறிப்புகளை பொறுத்தவர முதலில் உங்கள் உடலுக்கு மருத்தவம் செய்வதிலிருந்து அரம்பித்து பிறகு வெளிப்பூச்சுக்கு வர வேண்டும் காரணம்.எல்லா பிரச்சனைக்கும் வியாதிக்கும் ஆணி வேர் உடலில் மறைந்து இருக்கிறது அதன் வெளிப்பாடுதான் நமது முக தோற்றம் .மேல் தோற்றம்.உதாரணமாக பெண்களுக்கு அதிக மாத விடாய் பிரச்ச்னை இருந்தால் முகப்பரு வரும்.கிட்னி பாதிக்கப்பட்டால் கருவளையம்,கண் உப்புதல் முதலியன வரும்.வெளிப்பூச்சு மட்டும் செய்து பயன் என்ன?

அழகு குறிப்புகள் - 1

முகம் சிகப்பு நிற்ம் பெற
சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம் 

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.

* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும்
கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ
வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.

* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு
மறைந்து விடும்.

* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில்
கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை
அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து
முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ
வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின்
முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து
முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக
இருக்கும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம்.
பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும். புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும். மிக மெல்லிய புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக் கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை.

* நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

* லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.

* காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.

* நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு. ஒல்லியாக
இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக
இல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள்
இறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.

* சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின் வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.

* ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.

* உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு கோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலைகளை அணிய வேண்டும்.

* மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ வேண்டும்.
கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும்.


* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் 
பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் 
மிருதுவாகும். 

* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ 
வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக 
மாறும். 

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் 
ஏற்படும் கருமை நிறம் மாறும். 

* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, 
ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி 
செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி 
மறையும். 

* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். 

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். 

* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, 
கரும்புள்ளி ஆகியவை மறையும். 

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும். 
பொடுகை விரட்ட வேப்பம்பூ 

காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் -  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளவாக

* தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும்.

* அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று பழங்கால அரேபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

* முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். 

* தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வர முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். 

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.


முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க


* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.


முகத்தில் உள்ள தழும்புகள் மறைய

* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும். 

*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும். 


வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு 

* அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். 

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.